செவ்வாய், 19 மே, 2015


                                            சூரியனின் எதிர்காலம்


சூரியனின் அணுக்கரு சமநிலை ஒருநாள் சீர்குலைவது நிச்சயம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முழுவதும் அப்போது ஹீலியமாக மாறிப்போகும் சூழ்நிலை குலைந்து நிற்கும் முயற்சியில் அதன் மையப்பகுதி ஹீலியத்தை எதிர்த்து ஜீரணம் செய்யத் துவங்கும். அது சமயம் வெப்பம் அதிகமாகும். சூரியன் சிவக்க ஆரம்பிக்கும்.சூரியனின் பருமன் அதிகமாகி அது ஒரு சிகப்பு நட்சத்திரமாகப் பருக்கும்.சூரியன் அருகில் உள்ள வெள்ளி,புதன் போன்ற கிரகங்கள் உருகிச் சூரியனுடன் கலந்துவிடும்.அதற்கள் பூமியில் உயிரினங்கள்  மறைந்துவிடும். கடல்கள் கொதித்து ஆவியாகி அடித்தளங்களில்  பாறைகள் அல்லது நிலப்பகுதி பொரிந்து போகும்.அதன்பின்னர் சூரியனின் வளர்ச்சி நின்றுபோகும்.அதன்பின்னர் வெள்ளைக்குள்ளன் வகையைச் சார்ந்த பூமி இருக்கும் அளவிற்குச் சிறியதாகிவிடும்.அதற்குமேல்,மீதியுள்ள ஹீலியத்தையும் எரித்தபிறகு சூரியன் வெறும் கரிக்கட்டையாகி உருண்டை வடிவில் மிஞ்சும்.அதுதான் சூரியனின் இறுதி நிலையாகும்.இது 500கோடிஆண்டுக்கு மேல்தான் நிகழும் என்று கூறுகிறார்கள்.நன்றி,வி.சாரதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக